Share Market: Ultimate Guide for Basics in Tamil

ஷேர் மார்க்கெட் அடிப்படைகள் தமிழில் பார்க்கலாம். Share Market (பங்குச் சந்தை) என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் கூடும் இடம். முதன்முதலில் share விற்கப்படும் பொழுது அவற்றை வாங்க குறிப்பிட்ட இடம் இருந்தது அங்கு மக்கள் கூடி பேசி வாங்கினார்கள். தற்போது நவீன உலகத்தில் மொபைல் இருந்தாலே போதும் ஒரு நிறுவனத்தின் பங்கை நம்மால் வாங்க முடியும்.

Share market basics:

ஷேர் மார்க்கெட்டில் உள்ள அடிப்படையான தகவல்களை இந்த பதிவில் நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் comment-ல் பதிவிடவும்

Share Market என்றால் என்ன?

Share Market-ல் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளனர்.

share market in tamil

உதாரணமாக ஒருவன் தனது A100 என்ற கம்பெனியை மேலும் விரிவாக்க நினைக்கிறான் அதற்கு அவனுக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது ஆனால் அவனிடம் 5 லட்சம் மட்டுமே உள்ளது மீதமுள்ள தொகையை அவன் எவ்வாறு சேர்க்கலாம்?

  1. ஒன்று கடன் வாங்குவது இவ்வாறு வாங்குவதால் அதில் ஏற்படும் லாப நஷ்டம் அனைத்தும் அவனையே சேரும்.
  2. இரண்டாவது வேறு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பிப்பது இவ்வாறு செய்வதால் லாப நஷ்டம் இதில் அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் பங்கு உண்டு.
  3. மூன்றாவது ஷேர் மார்க்கெட்டில் தன்னுடைய கம்பெனியை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்பட்டு பணம் திரட்டுவது, ஷேர் மார்க்கெட்-ல் இணைக்கப்படும் கம்பெனியின் வளர்ச்சி, சொத்து மதிப்பு, கடன், நிதி நிலைமை,அதே துறையில் உள்ள நிறுவனங்களின் விலை மதிப்பு போன்ற Fundamentals-கு ஏற்றவாறு அந்த கம்பெனியின் பங்கிற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. விலை நிர்ணயிக்கப் பட்ட பிறகு பங்கு சந்தையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஏற்படும் லாப, நஷ்டம் கம்பெனிக்கும் அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கியவர்களுக்கும் ஏற்படும்.

இவை முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க SEBI (செபி) என்ற அமைப்பு செயல்படுகிறது. இதனையே ஷேர் மார்க்கெட்(Share Market) என்கிறோம்.

Share Market: பங்கு(Share) என்றால் என்ன ?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான பணத்தை திரட்ட அதன் பங்குகளை விற்பார்கள், பங்குகளின் விலை நிறுவனத்தின் மதிப்பு, அதே துறையில் உள்ள நிறுவனங்களின் விலை மதிப்பு பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனையே பங்கு(Share) என்கிறோம்.

ஒரு நிறுவனத்தில் 60% க்கும் மேல் பங்குகளை தங்களிடம் வைத்துள்ள நிறுவனங்களின் நம்பகத்தன்மை அதிகம் மேலும் அந்த பங்குகளின் மேல் எந்த கடனும் இருக்கக்கூடாது.பதக்கங்கள், சோக்கர்ஸ் மற்றும் chain necklace போன்ற பிரபலமான பெண்களுக்கான நெக்லஸ்களை வழங்குகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு பல்வேறு உலோகங்கள் மற்றும் ரத்தினக் கற்களில் நகைகளை வாங்கவும

ஒரு கம்பெனியின் மொத்த மதிப்பு மற்றும் Share-ன் விலையைப் பொறுத்து Shares பிரிக்கப்படுகிறது

பங்குகளை வாங்குவதற்கு முன் சந்தை அபாயங்களை அறிந்து முறையான தெளிவு பெற்ற பின்பே பங்குகளை வாங்க வேண்டும்

Share Market: பங்குதாரர்(Share Holders) என்றால் என்ன?

பங்குகளை வாங்கி வைத்துள்ளவர்கள் பங்குதாரர் என்கிறோம். பங்குதாரர் பங்குகளை வாங்குகின்றனர் ஏனெனில் சில நிறுவனங்களை தொடங்கி அதற்கான பொருட்செலவு, இடம், சம்பளம், வாடகை என பல காரணங்களை எதிர்கொள்ள முடியாமல் நன்கு வளர்ந்த அல்லது நன்கு உயரும் என்று நினைக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குகின்றனர்.

இதனால் அந்த நிறுவனங்கள் வளரும் பொழுது இவர்களின் பணமும் வளர்கிறது.

அதேபோல் சிலர் பிராண்ட் நிறுவனங்களின் பங்குகளையும் சிலர் Penny Stock போன்ற நிறுவனங்களின் பங்குகளையும் வாங்குகின்றனர. அனைவரின் நோக்கமும் நல்ல முதலீடு என்பதாகும்.

சிலர் பணத்தை இரு மடங்காக உயர்த்த மட்டுமே வாங்குகின்றனர் இதில் சந்தை அபாயங்கள் பல உள்ளன அதனை தெரிந்து கொண்டு பங்குகளை வாங்க வேண்டும்.

பங்குகளை வாங்குபவர்கள் மூன்று வழிகளில் வாங்குகின்றனர்.

1 Long Time Investment

2 Short Time Investment

3 Intra Day

இவை அல்லாமல் Bond, Mutual Fund, Gold, Silver, Cryptocurrency, Commodities என பல வழிகளில் பங்குகளை வாங்குகின்றனர் இதில் லாபமும் வரும் நஷ்டமும் வரும்.

Share Market: Primary and Secondary Market என்றால் என்ன?

இதில் நாம் பிரைமரி மார்க்கெட் & செகண்டரி மார்க்கெட் என்றால் என்ன என்பதை தனித்தனியாக பார்க்கலாம்

Primary Market

இதில் முதல் முதலில் Share Market-க்கு வரும் நிறுவனங்களின் பங்குகள் அதன் விலையைப் பொறுத்து Single or Bulk-ஆக சந்தைப்படுத்தப்படும். இதன் ஆரம்ப விலையிலேயே இங்கு கிடைக்கும்.

இதனை IPO (ஐபிஓ) என்கிறோம் இதில் பங்குகளை வாங்க மட்டுமே முடியும் விற்க முடியாது. இதனையே பிரைமரி மார்க்கெட்(Primary Market) என்கிறோம்.

ஐபிஓ-விலிருந்து மார்க்கெட்டிற்கு சென்றவுடன் Share அதன் தேவைக்கு ஏற்றவாறு விலை உயர்வு அல்லது வீழ்ச்சி அடையும்.

Secondary Market:

இங்கு நிறுவனங்களின் பங்குகள் வாங்கவும், விற்கவும் இயலும். முதன்மை பங்குச்சந்தையில்(Primary market) வாங்கப்பட்ட பங்குகளை இங்கு விற்கலாம். இதில் மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு பங்குகள் விலை உயர்வும் சரிவும் அடைகின்றன.

இங்கு Share வாங்கலாம், விற்கலாம், Hold செய்யலாம். இதனையே செகண்டரி மார்க்கெட் (Secondary Market) என்கிறோம்.

இந்தியாவில் இதனை நடத்த NSE, BSE என்ற இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன.

National Stock Exchange (NSE)

இதில் 1700-க்கும் மேற்பட்ட கம்பனி லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதில் சிறந்த 50 கம்பெனி தேர்ந்தெடுத்து அதில் ஏற்படும் லாப நஷ்டங்களை கொண்டு நிஃப்டி என்ற இந்தக் INDEX செயல்படுகிறது. மேலும் இதில் பல INDEX உள்ளன.

உதாரணமாக Nifty it, Nifty Pharma, Nifty metal, …

Bombay Stock Exchange (BSE)

இதில் 5400 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் list செய்யப்பட்டுள்ளன. இதில் சிறந்த 30 கம்பெனிகளின் லாப நஷ்டங்களை கொண்டு SENSEX(சென்செக்ஸ்) என்ற INDEX செயல்படுகிறது. NIFTY, SENSEX-களின் உயர்வு மற்றும் குறைவு ஆகியவற்றை கொண்டு மார்க்கெட்டின் வளர்ச்சி அறியப்படுகிறது.

பங்குகளை வாங்குவதற்கு முன் சந்தை அபாயங்களை அறிந்து முறையான தெளிவு பெற்ற பின்பே பங்குகளை வாங்க வேண்டும்

Share Market STOCK என்றால் என்ன?

Stock என்பது NSE மற்றும் BSE-இல் List செய்யப்படும் கம்பெனிகளை நாம் Stock என்கிறோம். இதேபோல அந்தந்த நாடுகளுக்கு தனித்தனியே ஷேர் மார்க்கெட்டுகள் உள்ளன. இதில் பிரபலமான பிறநாட்டு share market list கீழே கொடுக்கப்பட்டுள்ளது

உலகின் பெரிய பங்குச் சந்தைகள்:

  • New York Stock Exchange (NYSE), United States
  •  NASDAQ, United States
  • Shanghai Stock Exchange (SSE), China
  • Euronext, Europe
  • Tokyo Stock Exchange (TSE)
  • Hong Kong Stock Exchange (HKSE)
  • Shenzhen Stock Exchange (SZSE), China
  • London Stock Exchange (LSE)
  • Bombay Stock Exchange (BSE)
  • National Stock Exchange (NSE)
  • Japan Stock Exchange (JPX)
  • Toronto Stock Exchange, Canada

Stockbroker என்றால் என்ன

இவர்களின் மூலமே நாம் Stock-களின் பங்குகளை வாங்க விற்க முடியும். இவர்கள் நமக்கு தேவையான Demat and Trading Account-ஐ உருவாக்கித் தருகிறார்கள்.

Equity, commodity, cryptocurrency, currencies, Bond, future, and options போன்ற அனைத்தையும் வாங்கவும், விற்கவும் மேலும் பாதுகாக்கவும் நமக்கு தேவைப்படும் இடமே trading, and Demat account இதனை வழங்குபவர்களையே Stockbroker or Share broker என்கிறோம்

Conclusion

இந்த வெப்சைட்டில் நம் பார்ப்பது அனைத்தும் கற்றல் நோக்கத்திற்கு மட்டுமே இதில் சந்தை அபாயங்கள் பல உள்ளன. அதை அறிந்து செயல்படுங்கள் மேலும் தங்களுக்கு ஏற்படும் லாப நஷ்டத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல.

This Post Has 2 Comments

  1. Margaretvtn

    Novost

  2. Margaretfbb

    Novost

Leave a Reply